Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... விஜய் சேதுபதி அல்டிமேட் ரிப்ளை!!

Webdunia
புதன், 12 பிப்ரவரி 2020 (13:57 IST)
Vijay Sethupathi

விஜய் சேதுபதி கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக எழுந்த வத்ந்திக்கு ரியாக்ட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.
 
சமீபத்தில் பிகில் பட தயாரிப்பாளர் அலுவலகம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீடு, நடிகர் விஜய் வீடு என வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். இந்த சோதனைக்கான காரணம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தனியார் கல்லூரின் பெயர் ஒன்று அடிப்பட்டது. 
 
அதோடு, திரையுலகில் உள்ள பலரும் குறிப்பாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி ஆகியோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாகவும், மதமாற்றத்தில் பிறரை ஈடுபடுத்த கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப் படுவதாகவும் கூறப்பட்டது. 
 
மேலும், பிகில் பணத்தில் கிடைத்த கருப்பு பணத்தின் மூலம் மதமாற்ற வேலைகள் ஜரூராக நடந்து வந்ததாகவும் இதனால் தான் இந்த திடீர் ஐடி ரெய்ட் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
இதனை கண்ட விஜய் சேதுபதி இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு, போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... என்று பதிவு செய்துள்ளார். 
 
பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழும தலைமைச் செயலதிகாரி அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் விஜய் சேதுபதி இவ்வாறு டிவிட் போட்டிருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments