Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் விஜய்க்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

Siva
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (08:24 IST)
அ.தி.மு.க.வை விமர்சித்து நடிகர் விஜய் பேசியதால், அவரது அரசியல் வாழ்க்கையில் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டது விஜய்யின் வீழ்ச்சிக்கு முதல்படி என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில், நடிகர் விஜய் அ.தி.மு.க.வை மறைமுகமாக விமர்சனம் செய்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு பல்வேறு அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
"எங்கள் கட்சியை எதிர்த்துப் பேசியவர்கள் அரசியலில் அடையாளம் தெரியாத அளவுக்கு சென்ற வரலாறு உண்டு" என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். அ.தி.மு.க.வை விமர்சிப்பது என்பது ஒரு கட்சியின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்காது, மாறாக, அது வீழ்ச்சிக்கான தொடக்கமாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அ.தி.மு.க.வின் பலம் மற்றும் மக்களின் ஆதரவு குறித்து விஜய் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும், இந்த நிலை தொடர்ந்தால் அவரது அரசியல் பயணம் திட்டமிட்டபடி வெற்றிபெறாது என்றும் அதிமுக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.  இந்த கருத்து, அரசியல் விமர்சகர்கள் மற்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ர மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

வெறிநாய் கடித்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு: ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சோகம்

அடுத்த கட்டுரையில்
Show comments