Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி தரப்பில் இருந்து பரப்பப்பட்ட வதந்தி? விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

Siva
வெள்ளி, 22 நவம்பர் 2024 (16:10 IST)
எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து பரப்பப்பட்ட வதந்தி காரணமாக விஜய் அதிரடி முடிவு எடுத்து, "அதிமுகவுடன் கூட்டணி இல்லை" என்று அறிவித்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுக்கு எதிராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக என்பதையும், விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதையும் வலியுறுத்தும் நோக்கில், அதிமுகவுடன் தவெக கூட்டணி உறுதியாகிவிட்டது என்ற வதந்தி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே இதுவரை எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கே இடையே மட்டுமே போட்டி உள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கும் நோக்கில் இந்த வதந்தி பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தான், விஜய் அதிரடியாக  புஸ்ஸி ஆனந்தை விட்டு, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என அறிவிக்க கூறியதாக தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments