Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளா செல்லும் விஜய்!

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (22:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
நடிகர் விஜய் தற்போது தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து, லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதில், ஒரு பாடல் மற்றும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.அதேபோல், இப்படத்தில் யுவன் இசையில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் இப்பாட்ல சூப்பராக வந்துள்ளதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா செல்கின்றனர்.
 
திருவனந்தபுரத்தில் தொடங்கும் படப்பிடிப்பாக அடுத்த வாரம் படக்குழு அங்கு செல்கின்றனர். விஜய்க்கு கேரளாவில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் அவரை காண ரசிகர்கள் ஆவருடன் காத்திருக்கின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments