Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரம் இருந்தும் பேச முடியவில்லை: சூர்யா பிரச்சனை குறித்து விஜய் தந்தை

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (11:44 IST)
நாம் சுதந்திர நாட்டில் இருக்கிறோம், ஆனால் நல்ல கருத்துகளை பேச முடியவில்லை. இது பலருக்கும் நடக்கிறது, தற்போது நடிகர் சூர்யாவிற்கு நடந்துள்ளது என்று தேசிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து குறித்த கேள்விக்கு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்
 
இயக்குனர் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று காலை முதல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 
சுதந்திர நாட்டில் நல்ல கருத்துக்களை பேசக்கூட அனுமதி இல்லை. இது எல்லோருக்கும் நடந்துள்ளது போல் தற்போது சூர்யாவுக்கும் நடந்துள்ளது. இருந்தாலும் அவர் நல்ல கருத்துக்களை தொடர்ந்து பேச வேண்டும் என்பதும், அவரை போலவே எல்லோரும் நல்ல கருத்துக்களை தொடர்ந்து பேச வேண்டும் என்பதும் என விருப்பம் என்று விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே கமல்ஹாசன், சீமான், தினகரன், அமீர், உள்பட பலர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது விஜய்யின் தந்தையும் ஆதரவு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments