முடிவு எடுத்தால் முதல்வர்தான்..!! – வழக்கம்போல பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (11:01 IST)
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வர உள்ளது. வழக்கமாக விஜய் திரைப்படங்கள் வெளியாகும்போதும், விஜய் பிறந்தநாளின்போதும் ரசிகர்கள் அவரை முதல்வர் வேட்பாளராக பாவித்து ஒட்டும் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.

இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்குமாறு விஜய் மக்கள் இயக்க தலைமை அறிவுறுத்தியுள்ள போதிலும் ரசிகர்கள் சில இடங்களில் இவ்வாறான போஸ்டரை ஒட்டி வருகின்றனர். தற்போது பீஸ்ட் ரிலீஸையொட்டி போஸ்டர் ஒட்டியுள்ள ரசிகர்கள் ”முடிவு எடுத்தால் முதல்வர் தான்” என்ற வாசகத்தோடு 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் இருப்பார் என்றும், அவருக்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்றும் பொருள்படும் வகையில் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments