லியோ பட பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த விஜய் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (20:46 IST)
கரூரில் லியோ திரைப்படத்தின் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த விஜய் ரசிகர் - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.
 
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் லியோ திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து திரையரங்குகளில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 
இந்த நிலையில்  கரூர் தெரசா கார்னர் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் திருச்சி மண்டல விநியோகஸ்தர் சார்பாக லியோ திரைப்படத்தின் பிரமோஷனுக்காக 30 அடியில் பிரம்மாண்ட கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கட் அவுட் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ரசிகர் ஒருவர், விஜயின் புகைப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்தார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்