தவெக முதல் மாநாட்டிற்கு சிக்கல்: சட்ட நிபுணர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை..!

Siva
புதன், 4 செப்டம்பர் 2024 (07:45 IST)
விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்து கொண்டிருப்பதை அடுத்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் காவல்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காததால் மாநாடு நடத்துவதை உறுதி செய்ய முடியாத நிலையில் உள்ளது

காவல்துறை அனுமதி தாமதம் காரணமாக தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி முக்கிய நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றும் நிர்வாகிகள் அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.மேலும் முதல் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று கூறப்படுவது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments