Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: கைக்கோர்த்த திமுக - விஜய் ரசிகர் மன்றம்!!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (09:03 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கப்பதாக முடிவு. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 
 
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விஜய் ரசிகர் மன்றம் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் என  தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும், தென் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளருமான பில்லா ஜெகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments