எப்போது இந்திராகாந்தி முதல்வராக இருந்தார் அமைச்சரே? - வைரல் வீடியோ

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (14:26 IST)
இந்திராகாந்தி முதலமைச்சராக இருந்தார் என சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய விவகாரம் வீடியோவாக வெளிவந்துள்ளது.

 
பொதுக்கூட்டங்களில், மேடைகளில் அரசியல்வாதிகள் உளறிக்கொட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திண்டுக்கல்லில் பேசிய அமைச்சர் சீனிவாசன், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை 18 எம்.எல்.ஏக்களுக்கும் டிடிவி தினகரன் பிரித்துக்கொடுத்தார் என அப்பாவியாக பேசி நெட்டிசன்களிடம் சிக்கினார்.  அடுத்ததாக தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார்.
 
புதுக்கோட்டையில் ஒரு அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இந்திராகாந்தி முதலமைச்சராக இருந்த போது, அப்போது தமிழகத்தை ஆட்சி செய்த கருணாநிதி அவருக்கு பணிந்து கிடந்தார் எனப் பேசினார். இந்த விவகாரம் வீடியோவாகவும் வெளிவந்து விட்டது.
 
இந்த வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் , இந்திராகாந்தி எப்போது முதலமைச்சராக இருந்தார்? அதிமுக அமைச்சர்கள் ஏன் இப்படி உளறி வருகிறார்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments