Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்: விக்னேஷ் எழுதிய கடிதத்தில் உருக்கம்

நம் உரிமைகளை மீட்க போராடுங்கள்: விக்னேஷ் எழுதிய கடிதத்தில் உருக்கம்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (13:38 IST)
காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காவிரி உரிமை மீட்பு ஊர்வலம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினர்.
 

 

யாரும் எதிர்பாராத விதமாக பேரணியில் திடீரென்று இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். அவர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலர், விக்னேஷ்குமார் என்பது தெரிய வந்தது.

உடனே கட்சியின் தொண்டர்கள் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். பின்னர், காவல்துறையினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீக்குளிப்புக்கு முன்பு விக்னேஷ் எழுதிய கடிதம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது அதில் அவர் கூறியிருப்பதாவது:

* காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.

* என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.

 * இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள்.

* நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள்.

* நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்

இவன்: பா. விக்னேஷ்
திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் அழகில் மயங்கிய புருனே இளவரசி : சந்திக்க விருப்பமாம்