Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குளிப்பதற்கு முன்பே ’பேஸ்புக்’கில் அறிவித்த விக்னேஷ்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (04:05 IST)
நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் குமார் கட்சி பேரணியில் தீக்குளிப்பதற்கு முன்பே தனது முகநூல் பக்கத்தில் தற்கொலை போராட்டங்கள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்.
 

 
காவிரி விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காவிரி உரிமை மீட்பு ஊர்வலம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன பேரணி நடத்தினர்.
 
யாரும் எதிர்பாராத விதமாக பேரணியில் திடீரென்று இளைஞர் ஒருவர் தீக்குளித்தார். அவர், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலர், விக்னேஷ் குமார் என்பது தெரிய வந்தது.
 
உடனே கட்சியின் தொண்டர்கள் அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். பின்னர், காவல்துறையினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தொடர்ந்து கவலைகிடமாக இருந்து வருகிறார்.
 

 
தீக்குளித்த விக்னேஷ், நேற்று முன் தினமே தனது 'பேஸ்புக்' பக்கத்தில், ”நாளை நடைபெறும் பேரணியில், பல தற்கொலை [பல தற்கொடை] போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஊடகங்கள் தங்கள் TRP rate ஐ உயர்த்திக்கொள்ள பேரணியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டுகிறேன்.
 
அப்போவது மான தமிழ் இனம் கொதித்து எழட்டும். மாணவர் போராட்டம் இம்மண்ணில் வெடிக்கட்டும்” என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments