கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:01 IST)
கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்!
இன்று முதல் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது இடத்தை பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று முதல் கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் B.V.Sc,B.Tech ஆகிய படிப்புகளில் சேர tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் மாணவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இணையதள விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும் என்றும், தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றம்‌ இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில்‌ காணலாம் என்றும், செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

தேர்தலில் தோல்வி அடைந்தால் பதவிகள் பறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

தமிழகத்தில் மீண்டும் பரவும் டெங்கு காய்ச்சல்!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments