Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணை வலையில் வீழ்த்தி அவரின் வீட்டில் தங்கிய வேந்தர் மூவிஸ் மதன்..

பெண்ணை வலையில் வீழ்த்தி அவரின் வீட்டில் தங்கிய வேந்தர் மூவிஸ் மதன்..
, செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:48 IST)
காசியில் சமாதி ஆகபோவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தலைமறைவாகிப் போன வேந்தர் மூவிஸ் மதனை நேற்று திருப்பூரில் ஒரு வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.


 

 
சென்னை எஸ்.ஆர்.எம் குழுமத்தில் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக, 100க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரூ.80 கோடி வசூலித்த மதன், திடீரெனெ  கடந்த மே மாதம் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார்.
 
அவரை கண்டுபிடிக்கும் படி, அவரது தாயார் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார். எனவே, அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க, போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றமும் கெடு விதித்திருந்தது.
 
இந்நிலையில்தான், நேற்று திருப்புரில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.  அந்த பெண்ணின் பெயர் வர்ஷா. அவர் எப்படி மதனின் வலையில் வீழ்ந்தார் என்பது பெரிய கதை. 
 
வர்ஷா(35) வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு ஆடை வடிவமைப்பில் அலாதி ஆர்வம் உண்டு. எனவே, பேஷன் டிசைனிங் முடித்து விட்டு,  திருப்பூரில் ஒரு நாகரீக ரெடிமேட் கடையை நடத்தி வந்தார். 
 
மேலும், சில நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைத்தும் கொடுத்துள்ளார். எனவே திரை உலகத்தோடு தொடர்பும் ஏற்பட்டுள்ளது. அப்படியே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்துள்ளது. இது அவருக்கு கணவருக்கு பிடிக்காததால், அவரை விட்டு பிரிய வேண்டியிருந்தது.
 
அவருக்கு, ஸ்ரீராம்(15) மற்றும் தருண்(7) என இரு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களோடு, பூண்டி அருகில் உள்ள ஜி.வி.கார்டன் பங்களா வீட்டிற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு குடியேறினார். அந்த வீட்டிற்கு மாதம் ரூ.25 ஆயிரம் ரூபாய் வாடைகை கொடுத்துள்ளார்.
 
இந்நிலையில்தான், வேந்தர் மூவிஸ் மதனுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு தெரிந்தவர்கள் மூலம் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கிறேன் என்று மதன் கூறியுள்ளார். எனவே, அவருடன் வர்ஷா நெருக்கமாக பழகியுள்ளார் .
 
எனவே, போலீசார் தன்னை தேடுவதை உணர்ந்த மதன், வர்ஷாவின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். வர்ஷாவின் வீடு, ஆள் அரவமற்ற பகுதியில் தனி வீடாக இருந்ததால் இது அவர்களுக்கு வசதியாக இருந்தது. அந்த வீட்டில் தங்கிய மதன், பகல் நேரங்களில் வெளியே வர மாட்டாராம். இரவில் வெளியே செல்வதற்கென, ஒரு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி, தலையில் ஹெல்மெட் அணிந்து, ஊரை சுற்றியுள்ளார் மதன்.
 
மேலும், வர்ஷாவிடம் 2 ஆடம்பரமான கார்களும் உண்டு. அதில் வர்ஷா காரை ஓட்ட, மறைந்தபடி மதன் வெளியே சென்று வந்துள்ளார். 
 
இந்நிலையில்தான், இதை எப்படியே மோப்பம் முடித்த போலீசார், நேற்று அதிகாலை வர்ஷாவின் வீட்டை முற்றுகையிட்டனர். போலீசாரைக் கண்டு திடுக்கிட்ட வர்ஷா, முதலில் போலீசாரிடம் மதன் இங்கே இல்லை என்று கூறியுள்ளார். 
 
அவரின் வீட்டிற்குள் போலீசார் தேடி பார்த்துள்ளனர். அப்போது, ஒரு அலமாரி போன்ற ஒரு அறைக்குள் மதன் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
 
இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத வர்ஷா, தனது கடையை திறக்கவில்லை. மேலும், அவரின் வீட்டின் முன்பு பத்திரிக்கையாளர்கள் கூடியிருப்பதால், வீட்டை விட்டு அவர் வெளியே வருவதில்லையாம். 
 
மதனும், அவரும் காரில் பலமுறை கோவை சென்று வந்துள்ளனர். அதுபற்றி, போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புலியிடமிருந்து உயிர் தப்பிய 5 வயது சிறுமி (வீடியோ)