Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு படி மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது - வேலூர் சி.எம்.சி. அதிரடி

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (16:26 IST)
நீட் தேர்வு படி மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது என வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது. 


 

 
பனிரெண்டாம் வகுப்பிற்கு பின் மருத்துவ கல்வியை படிக்க வேண்டுமெனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதை நீதிமன்றமும் உறுதி செய்தது.
 
அந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதைத் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில், வேலூரில் உள்ள சி.எம்.சி (கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி), இந்த வருடம் நீட் தேர்வு முறையில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த முடியாது என அறிவித்துள்ளது. இதனால், 99 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்கள் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து படிப்பிற்கான இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அந்த மருத்துவமனை சார்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments