Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (08:46 IST)
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்தாலும் பாஜக மற்றும் அதிமுக இடையே கள்ள உறவு இருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை அதிமுக பிரமுகர் வேலுமணி சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த கட்சியின் ஆய்வு கூட்டத்திற்கு பின், என் மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சியினருக்கு வழங்கினேன். பின், என் குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை சந்தித்து, அழைப்பிதழை வழங்கினேன்.

சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் பழனிசாமி, அ.தி.மு.க.,வை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. பழனிசாமிக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக வெளியான தகவல், வன்மையாக கண்டிக்கத்தக்கது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டத்துக்கே தாங்காத புதிய பாம்பன் பாலம்..! - ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை!

இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய கசாப்பு கடைக்காரர்: லிவ் இன் உறவில் ஏற்பட்ட விபரீதம்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்போது? என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்?

தங்கம் விலை 2வது நாளாக சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

வேகமாக உயர்ந்து வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்