Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேளச்சேரி - சென்னை கடற்கரை பறக்கும் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து

பறக்கும் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து

வேளச்சேரி - சென்னை கடற்கரை பறக்கும் ரயில் சேவை சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து
, சனி, 6 பிப்ரவரி 2016 (08:37 IST)
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
சில பொறியியல் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - வேளச்சேரி (பறக்கும் ரயில் பிரிவு) இடையே இந்த பிப்ரவரி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் (6, 13, 20, 27 ஆம் தேதிகள்) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
 
அதன்படி, சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.30, 11.45 மற்றும் பிற்பகல் 12.05, 12.25, 12.45, 1.05, 1.25, 1.45, 2.05, 2.25, 2.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது.
 
அதுபோல மறுமார்க்கத்தில் வேளச்சேரியில் இருந்து காலை 11.35, 11.55 மற்றும் பிற்பகல் 12.15, 12.35, 12.55, 1.15, 1.35, 1.55, 2.15 2.35, 2.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
 
மேலும், இந்த பிப்ரவரி மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (7, 14, 21, 28 ஆம் தேதிகள்) மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
 
அதன்படி, சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க் கத்தில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.40, 11, 11.20, 11.40, பகல் 12, மற்றும் பிற்பகல் 12.20, 12.40, 1, 1.20, 1.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது.
 
அதுபோல மறுமார்க்கத்தில் வேளச்சேரியில் இருந்து காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.30, 11.50 மற்றும் பிற்பகல் 12.10, 12.30, 12.50, 1.10, 1.30, 1.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil