Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை: காவல்துறை தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:18 IST)
இன்று முதல் சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை:
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை நடைபெறும் என்றும் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் வாகன சோதனை நடைபெறும் என்றும் காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதை அடுத்து இரவில் யாரும் வாகனத்தில் செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி வாகனத்தில் செல்பவர்களை கண்காணிப்பதற்காக சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனை மையம் தயாராக இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு இரவில் வாகனங்களில் வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது 
 
ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு என்பதால் அன்றைய நாளில் பகலில் கூட வாகனங்கள் செல்ல கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கின் மருத்துவ காரணங்களுக்காக செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றும் ஆனால் அதே நேரத்தில் தகுந்த சான்றுகள் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments