Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? விஜயகுமார் அதிரடி தகவல்

வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? விஜயகுமார் அதிரடி தகவல்
, செவ்வாய், 7 ஜூன் 2016 (15:41 IST)
சந்தனமர கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது எப்படி? என்று ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றை விஜயகுமார் எழுதி வருகிறார்.


 

 
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களையும் அச்சுறுத்துய,  சந்தனமர கடத்தல் என்ற அடைமொழி கொண்ட வீரப்பன், சுமார் 20 ஆண்டுகள் வன பகுதியில் இருந்து கொண்டே தமிழ்நாடு அரசை ஆட்டி படைத்தவர். 
 
கடத்தல் மன்னன் என்று பெயர் எடுத்த வீரப்பன் மீது 180 பேரை கொலை செய்ததாகவும், கோடி கணக்கில் யானை தந்தங்களை கடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையில் தனி அதிரடிப்படை அமைக்கப்பட்டு வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
 
வீரப்பனை பிடிக்க அதிரடி படையினர் பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். காவல்துறை பிரிவில் இருந்து ஒருவர் வீரப்பன் அணியில் சேர்ந்து, அவருடன் பழகி பின்னர் வீரப்பனை காட்டை விட்டு வெளியே வரச்செய்து சுட்டு வீழ்த்தினர்.
 
இத்தகவலை விஜயகுமார் தெளிவாகவும், விரிவாகவும் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக எழுதி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
சந்தனமர கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டது பற்றி சரியான தகவல்களை அளிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காகவே இந்த புத்தகத்தை எழுதி வருகிறேன், இது எனது நேரடி அனுபவம் நிறைந்த புத்தகம். உண்மையான தகவல்களை கொண்டதாக இருக்கும். பாதுகாப்பு காரணங்களுக்காக சிலரது பெயர்களை தவிர்த்துள்ளேன், என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: ஆன்மீகத்தில் அதிமுக வட்டாரம்