Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 பேர் விடுதலையை அடுத்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (13:16 IST)
7 பேர் விடுதலையை அடுத்து சந்தனக்கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அதே போல் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் மூன்று பேரும் வனச்சரகர் சிதம்பரநாதன் என்பவரை கொலை செய்த நிலையில் இது குறித்த வழக்கில் வீரப்பனின் அண்ணன் மாதையன், மற்றும் ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர் 
 
இதில் வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் கோவை சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து நேற்று இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்
 
வீரப்பன் கூட்டாளிகள் விடுதலையை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் வரவேற்றுள்ளார். இதை போல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments