Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் தயாரிச்சு தறோம்.. அனுமதி குடுங்க! – ஸ்டெர்லைட் ஆலை மனு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (10:58 IST)
இந்தியாவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் மனு அளித்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்த நிலையில் சில வருடங்கள் முன்னதாக மூடப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் பல மனுக்களை அளித்து வந்தது.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் பல ஆக்ஸிஜன் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தில் ஒரு நாளைக்கு 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அவசர நிலை கருதி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments