Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக பங்கேற்காது!

திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக பங்கேற்காது!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (10:19 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்த இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுக சார்பில் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசித்து வந்தது.


 
 
திமுக கூட்ட உள்ள இந்த கூட்டத்திற்கு மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்காது என மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார். மேலும் திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது ஏமாற்று வேலை. இது ஒரு நாடகம் எனவும் அவர் கூறினார்.
 
இந்நிலையில் மக்கள் நல கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறிய போது, காவிரி பிரச்சனை பொதுப்பிரச்சனை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை மக்கள் நல கூட்டணியில் முன்வைத்தேன். ஆனால் கூட்டணியில் உள்ள பெரும்பான்மையின் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என திருமாவளவன் கூறினார்.
 
இந்நிலையில் திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எழுதிய கடிதத்தில் திமுக கூட்ட இருக்கும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விசிக பங்கேற்க முடியாத சூழலில் இருப்பதாக கூறியுள்ளார்.
 
மேலும் மக்கள் நல கூட்டணி திமுக கூட்ட இருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்துள்ள நிலையில் நாங்கள் பங்கேற்றால் அது கூட்டணியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறி இந்த கூட்டத்தில் விசிக கலந்துகொள்ளாது என கூறியுள்ளார்.

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments