Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலக் கூட்டணிக்கு திருமா முழுக்கு?

மக்கள் நலக் கூட்டணிக்கு திருமா முழுக்கு?

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (11:33 IST)
மக்கள் நலக்கூட்டணிக்கு முழுக்குப்போடுவதை தவிர வேறுவழயில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

 
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி அமைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
 
ஆனால், தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். 26 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
 
இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில், திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா அல்லது மக்கள் நலக்கூட்டணியை முன்னெடுத்துச் சென்றால் மக்கள் அங்கீகாரம் கிடைக்குமா என தனது நெருகங்கிய நண்பர்களோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
 
இதனையடுத்து, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கும் சரி, மக்கள்நலக்கூட்டணிக்கும் சரி முழுக்குப்போட தயராகிவிட்டதாக அக்கட்சி வட்டாரத்தில் வேகமாக தகவல் பரவிவருகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அடுத்த கட்டுரையில்
Show comments