Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காயத்ரி ரகுராம் உருவப்படம் எரிப்பு..

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (15:34 IST)
காயத்ரி ரகுராமின் உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஹிந்து கோயில்களின் சிற்பங்களை குறித்து சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து காயத்ரி ரகுராம் திருமாவளவன் குறித்து பல அவதூறு கருத்துகளை வைத்து வந்தார்.

இந்நிலையில் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் ஒன்று திரண்ட விசிகவினர், காயத்ரி ரகுராமின் உருவப்படத்தை எரித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர். மேலும் காயத்ரி ரகுராமை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த செய்தியினை அறிந்த காவல் துறையினர் உடனடியாக போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று, போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அமைதியாக கலைந்து போக வலியுறுத்தினர். அதன் பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், மோடி இன்னும் டீ விற்று கொண்டிருப்பார்: சித்தராமையா

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. தவெக தலைவர் விஜய்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பிரியங்கா காந்தி..!

மணிப்பூர் கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம் உள்ளதா? எலான் மஸ்க் விளக்கம்..!

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை மாதங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments