Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் குழம்பு சட்டியை ஏன் கழுவணும்? விசிக எம்பியின் நக்கல் கேள்வி

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (19:32 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து கூறிய ஒருசில கருத்துக்கள் நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்களும் சிலர் ரஜினியின் பேச்சை கிண்டலடித்து வருகின்றனர்.
 
குறிப்பாக இன்று ரஜினிகாந்த் பேசியபோது, ‘வெறும்‌ ஆட்சி மாற்றம்‌ மட்டும்‌ போதாது, இங்கு அரசியல்‌ நடத்தப்படும்‌ முறையிலும்‌ மாற்றம்‌ வர வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி, மதச்‌ சார்பற்ற ஆட்‌சியைத்‌ தர முடியும்‌. அரசியல்‌ மாற்றம்‌ இல்லாத ஆட்சி மாற்றம்‌ என்பது மீன்‌ குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல்‌ அதிலேயே சர்க்கரை பொங்கல்‌ செய்வது போன்றது என்று கூறினார்.
 
மீன் குழம்பு சட்டியை ஏன் கழுவணும்?
இதுகுறித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிகுமார் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவிவிட்டு பொங்கல் வைக்கவேண்டும்? புதிதாக ஒரு பாத்திரத்தில் வைக்கலாமே! இவரது திட்டத்தை சோதித்துப் பார்க்க ஏன் ஒரு நாட்டை இவர் உருவாக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கட்சித் தலைமைக்கு ஒருவர் ஆட்சித் தலைமைக்கு ஒருவர் என்பது இந்திய அளவில் காலகாலமாய் இருப்பதுதானே? மன்மோகன்சிங் பிரதமர், சோனியா காங்கிரஸ்  தலைவர். மோடி பிரதமர், நட்டா பாஜக தலைவர். மாநிலங்களிலும்கூட அப்படி இருக்கிறது என்றும் ரவிகுமார் எம்பி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments