Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமாருக்கு கல்தா: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமாருக்கு கல்தா: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி
, திங்கள், 23 நவம்பர் 2015 (23:23 IST)
தமிழக காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமார் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வசந்த குமார் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராக நீடித்து வருகிறார். எனவே, வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து அவர் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்.
 
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக டெல்லி சென்று புகார் அளித்த வசந்தகுமாரை, காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால், இளங்கோவன் எதிரணி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil