Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் வண்டலூர் பூங்காவின் மதில் சுவர் உடைந்தது: வைரலான வீடியோ

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (19:27 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் திடீரென உடைந்ததில் வெள்ள நீர் பூங்காவிற்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் சாலை மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


 


சென்னை மற்றும் புறநகரங்களில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் மதில் சுவர் திடீரென உடைந்துள்ளது. இந்நிலையில் மதில் சுவர் உடைந்ததில் வெள்ள நீர் பூங்காவிற்குள் ஓடுகின்றது.

மேலும், அந்த வெள்ள நீர் சூழ்ந்து அபாய நிலையில் அப்பகுதி உள்ளது. மேலும், வண்டலூர்-சிங்கப்பெருமாள் கோவில் இடையே ஜி.எஸ்.டி. சாலையில் ஒருபுறம் வெள்ளம் சூழ்ந்ததால் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை மூழ்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த காட்சியை பேருந்தில் அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போன் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் வெளியிட்டுள்ளனர்.
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments