Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜல்லிகட்டு தடையை நீக்க சட்ட நடவடிக்கை : டெல்லி செல்கிறது வானதி சீனிவாசன் குழு

ஜல்லிகட்டு தடையை நீக்க சட்ட நடவடிக்கை : டெல்லி செல்கிறது வானதி சீனிவாசன் குழு
, புதன், 13 ஜனவரி 2016 (11:31 IST)
ஜல்லிக்கட்டு மீதி விதிக்கப்பட்ட தடையை அகற்றுவதற்காக, பாஜக துணைத்தலைவரும், வழக்கறிஞருமான வானதி சீனிவாசனின் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


 

 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு சென்ற ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு தகர்த்தியது. இதனையடுத்து தென் மாவட்டங்கள் களைகட்ட ஆரம்பித்தன. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடை பெற்றிருந்த வேளையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. 
 
இதற்கு தமிழகமெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முக்கியமாக தென் மாவட்டங்களில் மக்கள் தெருவில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 
 
ஒருபுறம், ஜல்லிகட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான முயற்சியில், வானதி சீனிவாசன் ஈடுபட்டுள்ளார். தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களை ஒருங்கிணைந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
 
அவர்கள்,  மூத்த அட்டர்னி ஜெனரலுடன் தடையை நீக்க சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை பெற உள்ளனர்.  வானதி சீனிவாசன் தலைமையிலான வழக்கறிஞர் குழு இன்று டில்லி செல்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil