Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றின் தேசமெங்கும் உந்தன் கானம் சென்று தங்கும் - இளையராஜாவை வாழ்த்திய வைரமுத்து

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (10:59 IST)
பத்ம விபூஷன் விருது பெற்றுள்ள இசைஞானி இளையராஜாவை கவிஞர் வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.

 
இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகிய பத்ம விபூஷன் விருது இசைஞானி இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருது இசைஞானிக்கு கிடைத்துள்ளது தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
 
ஏற்கனவே பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு மூத்த கலைஞர்களான ரஜினி, கமல் மற்றும் நடிகர் சங்க தலைவர் விஷால் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
பத்ம விருதுகள்  பெறும் 
85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்” 
- என்ற காதல் ஓவியம்  வரிகளால் வாழ்த்துகிறேன்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கவிஞர் வைரமுத்துவும், இளையராஜாவும் ஒன்றாக பணிபுரிவதை பல வருடங்களாக  நிறுத்திவிட்டனர். மேலும், அவர்கள் பேசிக்கொள்வதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு 50 ஆயிரம் அபராதம்!

மக்களவையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகளின் ரியாக்சன் என்ன?

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை? வானிலை எச்சரிக்கை..!

அதானி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..!

அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வு ரத்து! மறு தேர்வு தேதி அறிவிப்பு வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments