Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவில் வைகோ; திமுகவில் நாஞ்சில் சம்பத்: அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம்!

அதிமுகவில் வைகோ; திமுகவில் நாஞ்சில் சம்பத்: அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம்!

அதிமுகவில் வைகோ; திமுகவில் நாஞ்சில் சம்பத்: அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம்!
, வியாழன், 22 டிசம்பர் 2016 (09:45 IST)
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து தமிழக அரசியல் சூழல் மிகவும் மாறியுள்ளது. குறிப்பாக அதிமுகவில் நிலவும் வெற்றிடத்தை மற்ற கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்க முயற்சிக்கிறது.


 
 
இந்நிலையில் அதிமுகவில் இருக்கும் நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைய இருப்பதாகவும். அதற்காக திமுக பொருளாளர் ஸ்டாலினிடமும் அவர் பேசிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
 
அதிமுகவில் ஜெயலலிதா இருக்கும் போது ஏகப்பட்ட பொருப்புகள், பரிசுப்பொருட்கள் என நல்ல மறியாதையுடன் வலம் வந்தார் சம்பத். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். இதற்கு பின்னணியில் சசிகலா இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா கட்சி தலைமையை ஏற்க இருப்பதால் தனக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்காது எனவும் சம்பத் நினைப்பதாக அவரது வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் நாஞ்சில் சம்பத் திமுக பக்கம் சாய இருப்பதற்கு வைகோவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
 
மதிமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்தபோது நாஞ்சில் சம்பத் வைகோவை தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஒரு கட்டத்தில் வைகோவை கடுமையாக விமர்சிக்கவே அவர் அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வைகோ அதிமுக உடன் கூட்டணி வைக்க இருப்பதாக கூறப்படுவதால் அது நாஞ்சில் சம்பத்தை திமுக பக்கம் ஓட வைத்துள்ளதாக தகவல் வருகிறது.
 
மக்கள் நல கூட்டணியால் இன்னும் எதுவும் செய்ய முடியாது எனவும், கொஞ்சம் கொஞ்சமாக மதிமுகவினர் திமுகவில் சேர்வதையும் உணர்ந்த வைகோ தற்போது அதிமுக பக்கம் சாய்ந்தால் தான் கட்சிக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என அதிமுக உடன் கூட்டணி அமைக்க சசிகலா உடன் வைகோ பேசிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
 
சமீபத்தில் பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற வைகோ சசிகலாவுக்கு பாஜக அரசியல் நெருக்கடிகள் கொடுக்க கூடாது என பேசுவதற்காக தான் சென்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வைகோ சசிகலா கூட்டணியில் விரைவில் தமிழகத்தில் அரசியல் நடக்கும் என கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய தலைமைச் செயலாளர் சகாயம்?: பெருகும் ஆதரவு!