Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் பதிலுக்காக காத்திருக்கிறோம்: வைகோ

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2016 (12:43 IST)
திருச்சியில் மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,


 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் இந்த விவகாரத்தில் 47 எம்.பி.க்களை கொண்டுள்ள அதிமுக நாடாளுமன்றத்தில் அழுத்தமாக குரல் கொடுக்கவில்லை. ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டிதனமானது என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. அவரது வார்த்தைகள் தமிழக மக்களை புண்படுத்தியுள்ளது. எனவே இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும்.

பெரம்பலூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், அதிமுக, தி.மு.க.வை தாக்கி பேசி உள்ளார். 2 கட்சிகளையும் அவர் சற்று தூரத்தில்தான் வைத்துள்ளார். மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு அவருக்கு நாங்கள் முழுமனதோடு அழைப்பு விடுத்துள்ளோம். மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இடம்பெற அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றார்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Show comments