Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிகவின் தோல்விக்கு வைகோவே காரணம் : ஹெச். ராஜா அதிரடி பேட்டி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (20:19 IST)
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்தித்த பின்னடைவுக்கு, மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவே காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஹெச். ராஜா இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது : 
 
“நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மோசமான பின்னடைவைச் சந்திப்பதற்கு வைகோவே செயல்பாடுகள்தான் காரணம்.  அதுதான் தோல்விக்கு வழிவகுத்தது. 
 
வருகிற உள்ளாட்சி தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடும்.  அதேபோல், வருகிற பொங்கல் திருநாளில், கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும். மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். மேலும், அனைத்து ரயில் நிலையங்களிலும் தரமான கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments