Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ! (வீடியோ இணைப்பு)

போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ! (வீடியோ இணைப்பு)

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (16:53 IST)
ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலம் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போராட்ட மேடையில் மயங்கி விழுந்தார்.


 
 
கதிராமங்கலம் பகுதி மக்கள் போராட்டம் நடத்திய போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க வைகோ, பழ நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று கதிராமங்கலத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
 
இந்த பேரணிக்கு பின்னர் கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றில் அனைத்து கட்சி தலைவர்களும் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரை நிகழ்த்த சென்றபோது அவர் மைக் அருகே திடீரென மயங்கி விழுந்தார்.

 

நன்றி: News18 Tamilnadu
 
இதனையடுத்து திரண்டிருந்த பொதுமக்களும், மேடையில் இருந்த தலைவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் வைகோவை மேடையில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்திற்கு பின்னர் வைகோ இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் தனது பேச்சை ஆரம்பித்தார். வைகோ உணவு அருந்தாமல் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றதால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments