பெரியார் மாதிரி வேணாம், அண்ணா மாதிரி வாங்க’: வைகோவிடம் தொண்டர்கள் வலியுறுத்தல்

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (07:30 IST)
திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதியை அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பெற்று வந்துள்ள வைகோவிடம் அவரது தொண்டர்கள் அந்த ஒரு தொகுதியில் வைகோவே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்களாம்
 
ஆனால் தனக்கு தேர்தல் அரசியலில் விருப்பம் இல்லை என்றும் பெரியார் போன்று தேர்தலில் போட்டியிடாமல் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புவதாகவும் சமீபத்தில் ஈரோட்டில் நடந்த மதிமுகவின் 27-ஆவது பொதுக்குழுக் கூட்டத்தில் வைகோ பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் நீங்க பெரியார் மாதிரி வேணாம், அண்ணா மாதிரி வாங்க என்று கோஷமிட்டதாகவும், தொண்டர்களின் அன்புக்கட்டளையை ஏற்றுக்கொள்வதாகவும் வைகோ கூறியுள்ளார்.
 
எனவே திமுக கொடுத்த  அந்த ஒரு தொகுதியில் வைகோவே போட்டியிடுவார் என்றும், ஒருவேளை அதில் தோல்வி அடைந்தால் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்றும் மதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே பாராளுமன்றத்தில் வரும் ஐந்து ஆண்டுகள் வைகோவின் குரல் ஒலிக்க போவது உறுதி என மதிமுக வட்டாரங்கள் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments