Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்குறளை இந்துத்துவாக்குள் அடைக்க முயற்சியா?? வைகோ கண்டனம்

Arun Prasath
திங்கள், 4 நவம்பர் 2019 (10:30 IST)
திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடைக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுவார்கள் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் காவி அங்கி, நெற்றியில் திருநீர் ஆகியவற்றை அணிந்துள்ளது போல் சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படத்தை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிட ஆதரவாளர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் “திருக்குறள் படித்து திருந்த பாருங்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து மதிமுக தலைவர் வைகோ, கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்” திருக்குறள் நெறியை இந்துத்துவ சிமிழுக்குள் அடைக்க நினைத்தால் தமிழக மக்கள் கொதித்தெழுந்து பதிலடி தருவார்கள்” என கூறியுள்ளார்.

ஹெச்.ராஜா தனது “சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில் தான் திருக்குறள் வடிவமைக்கப்ட்டது” என கூறியுள்ள நிலையில் தற்போது வைகோ கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கொலை சம்பவம்! ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு! - உஷார் நிலையில் காவல்துறை!

தமிழகத்தின் ஒவ்வொரு பூத்திலும் தண்ணீர், மோர் பந்தல்கள்: அண்ணாமலை

பசுமாட்டை கடித்து குதறிய தெருநாய்கள்.. பரிதாபமாக இறந்த பசுமாடு..!

கொலைய லிஸ்ட் போடுறதுதான் திமுகவின் சாதனை! எடப்பாடியார் ஆவேசம்! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments