Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வின் மரணத்தை கொச்சை படுத்தி விட்டார் நீதிபதி - வைகோ வருத்தம்

ஜெ.வின் மரணத்தை கொச்சை படுத்தி விட்டார் நீதிபதி - வைகோ வருத்தம்
, ஞாயிறு, 1 ஜனவரி 2017 (17:18 IST)
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக பிரமுகர் ஜோசப் என்பவர் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


 

 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெ.வின் மரணத்தில் தனக்கே மர்மம் உள்ளது என்று கூறியதோடு, இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார். இந்த மரணம் குறித்து மத்திய அரசும் எந்தத் தகவலையும் வெளியிடாதது ஏன் என அவர் கேள்வியும் எழுப்பினார். மேலும், ஜெ.வின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டி வரும் எனவும் அவர் எச்சரித்தார்.
 
இதுபற்றி கருத்து இன்று கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ “ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. அப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்து இருக்க கூடாது. இது அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. 
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலிக்க மறுத்த கல்லூரி பேராசிரியைக்கு கத்திக் குத்து - வாலிபர் கைது