பாகிஸ்தான் தீவிரவாதி வைகோ ஒழிக: பாஜகவினர் கோஷத்தால் பரபரப்பு

Webdunia
சனி, 2 மார்ச் 2019 (06:42 IST)
நேற்று பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்திருந்தபோது கருப்புக்கொடி காட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த வைகோ, கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டார். ஒவ்வொரு முறை பிரதமர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ள வைகோதான், கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது முதல் நபராக பாஜக கூட்டணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டிய வைகோவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருடைய வேன் மீது கல்லெறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மதிமுக, பாஜகவினர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது
 
இந்த நிலையில் வைகோவுக்கு எதிராக பாஜக தொண்டர்கல் கோஷமிட்டனர். முதலில் வைகோ ஒழிக என்ற கோஷமிட்ட அவர்கள் ஒரு கட்டத்தில் 'பாகிஸ்தான் தீவிரவாதி வைகோ' என்று கோஷமிட்டதால் பரபரப்பு அதிகரித்தது. அதன்பின் போலீசார் இருதரப்பினர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
 
வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்னும் பலமுறை பிரதமர் மோடி தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. வரும் 6ஆம் தேதி கூட சென்னை வருகிறார். ஒவ்வொரு முறையும் வைகோ கருப்புக்கொடி காட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments