Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகுண்டராஜன் விவி மினரல்ஸ் குடோனுக்கு சீல்

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (16:31 IST)
தூத்துக்குடி அருகே தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான விவி மினரல்ஸ் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



 

 
தூத்துக்குடி மாவட்டம், தங்கம்மாள்புரத்தில் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான விவி மினரன்ஸ் குடோன் உள்ளது. இந்த நிறுவனம் விதிமுறைக்கு மாறாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. கடந்த 2013ஆம் ஆண்டு தாது மணல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
 
ஆனால் இந்த நிறுவனம் அதன்பிறகும் தடையின்றி சட்டவிரோதமாக தாது மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவதாக புகார் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கருணாகரன் நடவடிக்கையில் ஈடுப்பட்டார். 
 
அதைத்தொடர்ந்து இன்று விவி மின்ரல்ஸ் குடோனில் அதிரடி சோதனை நடைப்பெற்றது. அதில் 25 மெட்ரிக் டன் தாது மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. 
 
மேலும் வைகுண்டராஜனுக்கு சொந்தமான 34 குடோன்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் வைகுண்டராஜன் டிடிவி தினகரனை சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments