Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா காலாவதியான மாத்திரை, பக்க விளைவுகளை ஏற்படுத்தும்: வைகைச்செல்வன்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (07:01 IST)
சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை என்றும் அது நோயைக் குணப்படுத்தாது என்றும் பக்க விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது சென்னைக்கு வந்துள்ள நிலையில் அவர் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் கூட சசிகலாவின் ஆதரவாளர்களாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை என்றும் அந்த காலாவதியான மாத்திரை நோயைக் குணப்படுத்தாது என்றும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். மேலும் சசிகலாவை  அதிமுக பொதுச்செயலாளராக அறிவிப்பதற்கு தீர்மானம் எழுதி முதலில் வாசித்தவன் நான் தான் என்றும் ஆனால் மக்கள் மக்கள் அவரை ஏற்கவில்லை என்றும் தற்போது ஓபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இருவரும் கட்சியை சிறப்பாக நடத்தி செல்கிறார்கள் என்றும் இந்த இருவரின் தலைமையில் கட்சி நல்ல நிலையில் முன்னேற்றம் அடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் சாலை விபத்து: திமுக பிரமுகரின் பேரன் உட்பட மூவர் கைது

சென்னையில் இன்று முதல் சிலிண்டர் விலை குறைவு.. வீடுகளுக்கான சிலிண்டர் எவ்வளவு?

துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி.. அரசு பணத்தை அள்ளி வழங்கிய மம்தா பானர்ஜி.. கண்டனம் தெரிவித்த பாஜக..!

சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய வேளாண் துறை அமைச்சர்.. பதவி நீக்கமா?

இந்தியா உள்பட 70 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments