ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கு.! சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு.!!

Senthil Velan
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (13:16 IST)
ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.  சிங்கமுத்து தன்னைப்பற்றிக் கொடுத்த பேட்டியில், பல பொய்களைக் கூறியது மட்டுமின்றி தன்னை தரக்குறைவாகப் பேசி உள்ளார் எனவும்  மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  
 
எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ரூ.5 கோடி கேட்டு வடிவேல் தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


ALSO READ: தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்..! 500 பேர் சிக்குவர் - நடிகை ரேகா நாயர்..!!
 
அவரின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்க சிங்கமுத்துவுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

அடுத்த கட்டுரையில்