வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (15:58 IST)
வாச்சாத்தி வன்கொடுமை வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட முதன்மை குற்றவாளியான IFS அதிகாரி நாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  வாச்சாத்தி மலை கிராம மக்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்டம் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உறுதி செய்தது.

நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை மற்றவர்களுக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டு சிறை ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம்  உறுதி செய்துள்ளது

 மேலும் வாச்சாத்தி கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 இந்த தீர்ப்புக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்