Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 45 சிறப்பு முகாம்கள் !!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:41 IST)
இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் நேற்று முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 
 
உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனிடையே கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு தேவையான தடுப்பூசி விரைவில் கிடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments