Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்னதும் துவங்கிய தமிழக அரசு - கர்ப்பிணிகளுக்கு இன்று முதல் தடுப்பூசி!

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (10:49 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அறிவிவித்துள்ளது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முடிவு குறித்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா மரணங்களை தமிழக அரசு மறைக்கவில்லை. கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறு என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments