Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்க எல்லாம் ஊழல் கட்சி ஆயிட்டாங்க! – கூட்டணி கட்சியையும் அட்டாக் செய்த வானதி சீனிவாசன்!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (14:45 IST)
சமீப காலமாக ஊழல் கட்சி யார் என்பது குறித்து அதிமுக – திமுக இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது குறித்து பாஜகவின் வானதி சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் பெரும் அரசியல் கட்சிகளாக அதிமுக – திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் ஒருவருக்கொருவர் ஊழல் புகார்களை தெரிவித்து பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜகவின் வானதி சீனிவாசன் கூறும்போது “பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் தமிழகம் ஊழலில் திளைத்துள்ளது என சில நாட்கள் முன்பாக அமித்ஷா கூறினார். சமீப காலமாக தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளும் மாறி மாறி யார் ஊழல் செய்தார்கள் என்பது குறித்து வார்த்தை போர் புரிவதை பார்க்கையில், மக்கள் அவர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே பேசுவது போல் உள்ளது” என கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் அதிமுகவையும் இணைத்து வானதி சீனிவாசன் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments