Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்ப காரணத்துக்காக 3 வயது குழந்தையை கொலை செய்த தாய்மாமன்

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (18:27 IST)
விளையாட்டுக்காக அடித்த 3 வயது சிறுவனை, பழிவாங்குவதற்காக தாய்மாமன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அழிஞ்சிவாக்கத்தை சேர்ந்தவர் முருகன். முருகனின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஹேமந்த் என்ற 3 வயது மகன் உள்ளார். ஹேமலதாவின் சித்தி மகன் தமிழ்செல்வன். எம்.ஏ பட்டதாரியான ஹேமந்த் வேலை தேடிக்கொண்டு இருந்துள்ளார்.
 
இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹேமந்துடன் தமிழ்செல்வன் விளையாடிய போது, சிறுவன் ஹேமந்த் விளையாட்டாக தமிழ்செல்வனை கடித்துள்ளார். மேலும், மற்றுமொருமுறை தமிழ்செல்வனின் கன்னத்திலும் ஹேமந்த் அறைந்துள்ளார்.
 
விளையாட்ட சிறுவன் ஹேமந்த் செய்த செயல் தமிழ்செல்வனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஹேமந்த்தை கொலை செய்வதாகவும் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
 
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த ஹேமந்த் திடீரென்று காணவில்லை. குடும்பத்தினரும்  பல இடங்களில் சிறுவனை தேடியுள்ளனர். பிறகு, அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஹேமந்த் பிணமாக கிடந்தார்.
 
இதைப்பார்த்து ஹேமந்த்தின் குடும்பத்தினர் கதறி அழுதனர் . இதுதொடர்பாக பெரியபாளையம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில், தமிழ்செல்வன் சிறுவனை பழிவாங்க, தூங்கி கொண்டு இருந்தபோது யாருக்கும் தெரியாமல் தூக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி அருகே கொண்டு சென்று, கை, கால்களை கட்டியதோடு ஹேமந்த்தின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments