Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன் காந்தி கைது: ஐநாவுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் தமிழக அரசு

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (05:30 IST)
சமீபத்தில் சென்னை மெரினாவில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.



 


திருமுருகன் காந்தி கைதுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஐ.நா சபை மனித உரிமை 35-வது கவுன்சில் கூட்டத்தில் சென்னையில், மே 17 இயக்கத்தின் சார்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டபோது, நினைவேந்தல் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.

இந்த பிரச்சனையை ஐநாவில் மூன்று நபர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து இன்று ஐநாவில் விவாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த பிரச்சனை ஐநாவின் பெரும் விவாதமானால் மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments