Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடுமலை ஆணவ கொலை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு

உடுமலை ஆணவ கொலை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு

உடுமலை ஆணவ கொலை: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவு
, திங்கள், 14 மார்ச் 2016 (11:40 IST)
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜாதி மாற்றி காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதியை மூன்று பேர் கொண்ட கும்பல் ஆணவ கொலை செய்தனர். இந்த ஆணவ கொலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தவிட்டுள்ளது.


 
 
இளம் தம்பதியினர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல்  நடத்திய இந்த தாக்குதலில் கணவர் உயிரிழந்தார், மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது குமரலிங்கம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சங்கர். பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சங்கர் படித்து வந்தார்.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கௌசல்யா. குமரலிங்கத்தில் உள்ள டைல்ஸ் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தார்.
 
அப்போது, கெளசல்யாவும், சங்கருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதலுக்கு, கௌசல்யா வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பையும் மீறி, சில மாதங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
இந்த இளம் தம்பதியினரை நேற்று பட்டப்பகலில் உடுமலை பேருந்து நிலையம் அருகில் மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கனவர் உயிரிழந்தார், மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil