Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் பந்திலே சிக்ஸ் அடித்த உதயநிதி: இளைஞர் அணியினர் நெகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (09:16 IST)
கழகத்தில் முக்கிய பதவி ஏற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் நிலையில் பொதுக்குழுவில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 
 
திமுக பொதுக்குழு கூடியவுடன் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு ஆகிய இருவரும் தங்களுக்கான பதவியை ஏற்றுக்கொண்டனர். 
 
இதனை அடுத்து துணை பொதுச் செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் நியமிக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதனையடுத்து புதிய பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.  
 
இந்நிலையில் பதவி ஏற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் நிலையில் பொதுக்குழுவில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் அவர் பேசியதாவது, பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் வாழ்த்தும் அளவுக்கு எனக்கு வயது கிடையாது. உங்கள் வழியில் நாங்கள் நடப்போம். 
நான் மருத்துவர்கள், களப்பணியாளர்கள் என யாரிடம் பேசினாலும் தலைவரிடமே பேசிவிட்டோம் என்கின்றனர். எல்லாரிடமும் அந்த அளவுக்கு நேரடி தொடர்பில் இருக்கிறார் தலைவர். அந்த அளவுக்கு இந்த ஆப் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார். 
 
இந்த கொரோனா காலத்திலும் கட்சியை மிக நேர்த்தியாக வழி நடத்தி கொண்டிருக்கிறார். அவருக்கு உறு துணையாக புதிய நிர்வாகிகள் பணியாற்றுவார்கள். இளைஞரணிக்கு கட்டளையிடுங்கள். நிறைய பணிகள் எங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. 
 
உரிமைகள் பறிக்கப்படும் இந்த நேரத்தில் எதிர்ப்பு குரல் கொடுக்க தயாராக இருக்கிறோம். எந்தவிதமான போராட்டமாக இருந்தாலும் நடத்த தயாராக இருக்கிறோம் என பேசினார்.
 
தனது முதல் பொதுக்கூட்ட பேச்சில் சதாரணமாக வந்து வாழ்த்து தெரிவித்துவிட்டு செல்லாமல் இளைஞர் அணியை பணியாற்றும் இளைஞர்களை முன்நிறுத்தி உதயநிதி பேசியது இளைஞர் அணி நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments