Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலிஸ்காரங்க என்கிட்ட கெஞ்சினாங்க… உதயநிதி மேடையில் பேச்சு!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (15:39 IST)
உதயநிதி ஸ்டாலின் தன்னை பிரச்சாரம் செய்யவேண்டாம் என போலிஸ்காரர்கள் கெஞ்சியதாகக் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் திமுகவின் இந்த முறை அந்தக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படுகிறார். அவர் தொடர்ச்சியாக 100 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததாக அவர் சில முறைக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுபற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் ‘என்னை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுக்க போலீஸார் சில முறைக் கைது செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் நான் பயப்படாமல் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன். ஒரு கட்டத்தில் என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் என்னிடம் போலிஸ்காரர்கள் பிரச்சாரம் செய்யவேண்டாம் என்று கெஞ்சினர். மேலும் என்னிடம் ‘மத்தவங்கள கைது பண்ணி விட்டா வீட்டுக்குப் போய்டுவாங்க. நீங்க விடிய விடிய பிரச்சாரம் பண்றீங்க. உங்கப் பின்னாடியே எங்களால சுத்திட்டிருக்க முடியல’ எனக் கூறினர்’ என பேசியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments