பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் - உதயநிதி உருக்கம்!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
உதயநிதி ஸ்டலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மறைந்த மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

 
முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கலைஞரை நினைவைப் போற்றியும் அவரின் அரிய சாதனைகளை எடுத்துக் கூறியும் அவர் நினைவைப் போற்றுகின்றனர்.
 
இந்நிலையில் உதயநிதி ஸ்டலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில், முத்தமிழறிஞரின் 3 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments